மகேஷ்பாபு வேண்டுகோளை ஏற்ற விஜய்

‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற சவால் கடந்த சில வாரங்களாகவே தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் பரபரப்பாக இருக்கிறது. சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் மரம் நடுங்கள் என்று கேட்டுக் கொண்ட ‘சேலஞ்ச்’ அங்கு மட்டுமே இருந்தது.

நடிகர் மகேஷ் பாபு அவருடைய பிறந்தநாளன்று மரக்கன்று ஒன்றை நட்டு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் இந்த சேலஞ்சில் பங்கேற்கக் கேட்டுக் கொண்டார். 

அதன்படி நடிகர் விஜய் இன்று அவரது வீட்டில் மரக்கன்று (?, பார்க்க செடி போல உள்ளது) ஒன்றை நட்டு அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளம் வழியே பகிர்ந்துள்ளார்.

தன் சேலஞ்சை விஜய் ஏற்றுக் கொண்டதற்கு மகேஷ் பாபு நன்றி தெரிவித்துள்ளார். இன்னும் ஜுனியர் என்டிஆர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் மகேஷ்பாபுவின் சேலஞ்சை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.

 

Read Previous

ஆகஸ்ட் 11ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

ஆகஸ்ட் 12ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular