வெற்றிமாறன் தயாரிப்பில் சூரி

வெற்றிமாறன் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க சூரி சம்மதம் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சூரி. இந்தப் படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலருடைய பாராட்டுகளையும் அள்ளியது. மேலும், அவருக்கு தொடர்ச்சியாக நாயகன் வாய்ப்பும் வந்துக் கொண்டிருக்கிறது.

தற்போது ‘விடுதலை 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. இதில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை. இந்தப் படத்திற்கு இடையே ‘கருடன்’ படத்திலும் நாயகனாக நடித்து முடித்துள்ளார் சூரி.

இதனிடையே, வெற்றிமாறன் தயாரிப்பில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சூரி. தன்னை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் என்பதால் சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டு நடிக்கவுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Read Previous

மீண்டும் இணையும் விஷால் – ஹரி கூட்டணி

Read Next

சிவகார்த்திகேயன் வெளியிடும் ‘குரங்கு பெடல்’

Most Popular