‘குரங்கு பெடல்’ படத்தினை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.
’மதுபானக் கடை’ மற்றும் ‘வட்டம்’ ஆகிய படங்களின் இயக்குநர் கமலக்கண்ணன். இந்தப் படங்களைத் தொடர்ந்து காளி வெங்கட் மற்றும் குழந்தைகளை வைத்து ‘குரங்கு பெடல்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இயக்குநராக மட்டுமன்றி, தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் கமலக்கண்ணன். ‘குரங்கு பெடல்’ திரைப்படம் இந்தியன் பனரோமாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தினை பார்த்த பலரும் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தார்கள்.
தற்போது ‘குரங்கு பெடல்’ படத்தினை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் வெளியிடவுள்ளார். இந்தப் படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்றி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதால் ‘குரங்கு பெடல்’ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.