விலகிய சூர்யா.. பாலா அறிக்கை!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வந்த திரைப்படம் வணங்கான். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்தார்.

இந்நிலையில், இயக்குனர் பாலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா நீக்கப்படுவதாக அந்த அறிக்கையில் இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே, வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும். அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.” என்று கூறியுள்ளார். 

Read Previous

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”

Read Next

50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஹனு-மேன்’ பட டீசர்

Most Popular