மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான் படம் ‘மாமன்னன்’. மாபெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படமே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும்.
தற்போது மீண்டும் வடிவேலு – பகத் பாசில் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்கள். இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படம் அந்நிறுவனம் தயாரிக்கும் 98-வது படமாகும்.
வயதானவரும், இளைஞரும் இணைந்து நாகர்கோவில் ஊரிலிருந்து பொள்ளாச்சி வரை செல்லும் பயணமே இந்தப் படம். முதலில் காமெடியாக தொடங்கி பின்பு த்ரில்லராக மாறிவிடக்கூடிய வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி.
இதில் பகத் பாசிலுக்கு நாயகி எல்லாம் கிடையாது. வடிவேலுக்கு ஜோடியாக சித்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜனவரி 22-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.