அப்லாஸ் என்டர்டெயின்மென்ட், டாசா மீடியா இணைந்து தயாரிக்க வெங்கடேஷ் பாபு இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘வதம்’.
ஸ்ருதி ஹரிஹரன், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்தொடர் MX பிளேயரில் வெளியாக உள்ளது.
சக்தி பாண்டியன் என்னும் காவல் அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ருதி.
பிரபல தொழிலதிபர் ஒருவரின் கொலையை பெண் காவல்துறை குழுவுடன் இணைந்து விசாரிக்கின்றார் சக்தி பாண்டியன். கொலை வழக்கில் வெளியாகும் உண்மைகள் அவர் நினைத்தே பார்த்திராத பெரும் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கின்றது. ஒரு பெண்ணாக அவரது துறையிலிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் பெரும் அச்சுறுத்தல்களை அவர் சந்திக்கின்றார். ஆனால் அவரது துணிவும், நேர்மையும் நீதிக்கான போரட்டமும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.
10 பகுதிகள் கொண்ட இந்த தொடர் நாளை மறுநாள் பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாகப் பார்க்கலாம்.
இத் தொடர் பற்றி இயக்குநர் வெங்கடேஷ் பாபு கூறியதாவது,
“மிக அழுத்தமான கதைக்களம் கொண்ட இத்தொடர், துணிவும் நேர்மையும் கொண்ட ஒரு பெண் காவல் அதிகாரியின் கதையை, ஒரே கட்டமாக பார்க்கும் ஆவலை, பரபரப்பை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தும். கொலைக் குற்ற வழக்கை, விசாரிக்கும் கதைகளை, ரசிக்கும் ரசிகர்களுக்கு இத்தொடர் பெருவிருந்தாக அமையும். இத்தொடரின் கதை இளமையான, பயமற்ற, துணிவு மிகுந்த சக்தி பாண்டியன் எனும் காவல் அதிகாரி, நீதிக்காக சட்டத்தையும் வளைக்கும் கதையினை கூறுவதாகும். ஸ்ருதி ஹரிஹரன் மிகுந்த அர்ப்பணிப்புடன் சக்தி பாண்டியன் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். மேலும் இத்தொடரில் பங்கு கொண்ட அனைவரும் பரப்பரப்பான தொடராக, இத்தொடர் உருவாக பாடுபட்டுள்ளனர்,” என்றார்.
ஸ்ருதி ஹரிஹரன் தனது கதாபாத்திரம் பற்றி கூறியதாவது,
ஒரு நடிகையாக, சவாலான கதாபாத்திரங்களையே தேர்வு செய்வேன். தனிப்பட்ட முறையில் எனக்கு சக்தி பாண்டியன் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. பயமில்லாமல் சரியானவைக்காக போராடும் கதாபாத்திரம் மற்றும் ஒரு தொழிலதிபரின் கொலையை தீர்க்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் கதாபாத்திரம். நடிக்கும் போது, இந்த கதாபாத்திரம் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளையும் உள்ளடக்கி இருந்தது. படப்பிடிப்பில் மிகவும் உற்சாகமாகவும், அதே நேரத்தில் மிகவும் கடினமாகவும் இருந்தது. இயக்குனர் வெங்கடேஷ் பாபு அளித்த ஆதரவு, இந்த கதாபாத்திரத்தை திறம்பட செய்ய உதவியாக இருந்தது. எங்களுடைய கடின உழைப்பிலும், அர்ப்பணிப்பிலும் உருவாகியுள்ள ‘வதம்’ தொடர் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பையும், மிகுந்த மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன்,” என்றார்.
மேலும் இத்தொடரில் அஷ்வதி வாரியர், செம்மலூர் அன்னம், ப்ரீத்திஷா ப்ரேம்குமரன் , விவேக் ராஜகோபால் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்தொடரின் 10 பகுதிகளும் முழுக்கவே இலவசாமாக 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் ப்ரத்யேகமாக ஒளிப்பரப்பாகிறது.