தங்கர் பச்சான் இயக்கத்தில் அருவி புகழ் ”அதிதி பாலன்”

தங்கர் பச்சானின் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது. தற்பொழுது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருவி புகழ் அதிதி பாலன் நடிக்கிறார். 

”இக்கதையின் ஆணி வேரான இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்தும் நடிகையைத் தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலான இப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்.” என்று கூறுகிறார் தங்கர்பச்சான்.

இறுதிகட்ட படபிடிப்பு 20ம் தேதி முதல் இராமேஸ்வரத்தில் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது. 
 

Read Previous

ஆக்ஷன் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’

Read Next

எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் வெளியாகும் ”சிரித்து வாழ வேண்டும்”