தண்டுபாளையம் – இதுவரை பார்க்காத க்ரைம் படம்

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளரும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெங்கட் பேசியதாவது,

“தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டரி. ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விஷயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்.

ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்களை நிச்சயம் தண்டிக்கணும். அதே நேரம் நாமும் பாதுகாப்பாக இருக்கணும். இந்த கண்டெண்ட் தான் இந்தப்படம்.

சுமன் ரங்கநாத் மேடத்திற்குத்தான் முதல் நன்றி சொல்லணும். கர்நாடகால உள்ள வெயில்ல தயங்காம நல்லா டெடிகேஷனா நடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. இசை இயக்கம் இரண்டுமே படத்தில் சிறப்பா இருக்கும்,” என்றார்

படத்தை வெளியிடும் பாலாஜி பேசுகையில்,

“இந்தப் படத்தை ரொம்ப அற்புதமா எடுத்திருக்காங்க. இது கொடூரமான படம்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் கொடூரமானவங்களிடம் இருந்து நாம எப்படி தப்பிக்கணும் என்பதைச் சொல்லும் படம் இது,” என்றார்

நடிகை சுமன் ரங்கநாத் பேசியதாவது,

“என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக் கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது.

எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி.

எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப் படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம். ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம். முள், வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப் படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.

Read Previous

சந்தானம் நடிக்கும் டகால்டி – டீசர் – 4 Tamil Cinema

Read Next

சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ – ‘சுட்ட’ கதையா ?

Most Popular