விஜய் டிவியில் வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘ஆயுத எழுத்து’.
ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், அவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை. அந்த கிராமத்திற்கு தான் செய்வதுதான் நல்லது என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெரிதாக அபிப்பிராயம் இல்லாதவர். அவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்த கிராமம், காளியம்மாள் சொல்வதைக் கேட்டு செயல்படுவது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. படிப்பின் பயனை சொல்ல விரும்புகிறார். அதற்காக இந்திரா செய்யும் செயல்கள் காளியம்மாவிற்கு பிடிக்காமல் போய்விடுகிறது.
இந்திராவிற்கும் காளியம்மாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை உருவாகிறது. இதனிடையே, காளியம்மாவின் மகன் சக்திவேலுக்கும் இந்திராவுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், அவர் காளியம்மாவின் மகன் என்பது இந்திராவிற்குத் தெரியாது. படித்த கலக்டர் பெண்ணான இந்திராவை தன் மருமகளாக ஏற்பாரா காளியம்மாள். இந்திராவிற்கு உண்மை தெரியும் போது என்ன நடக்கும் ?, இதுதான் ‘ஆயுத எழுத்து’.
பிரம்மா இயக்கும் இத் தொடரில் ஸ்ரீது கிருஷ்ணன் இந்திராவாக நடிக்கிறார். இவர் கல்யாணமாம் கல்யாணம் மற்றும் ஜோடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் ஆனவர்.
மௌனிகா, காளியம்மாவாக நடிக்கிறார். அம்ஜத் கான், ஷக்திவேலாக நடிக்கிறார்.