விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி Mrs சின்னத்திரை. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களது திறமை நமக்கு வெளிப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை சமையல் சுற்று, ப்ரோபோசல் சுற்று, கிராமத்து சுற்று, ஷாப்பிங் சுற்று, அட்வென்ச்சர் சுற்று என பல சுற்றுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் கதாநாயகிகளின் திறமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமைந்தது.
தற்போது இந்த நிகழ்ச்சி தனது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. Mrs சின்னத்திரை யார் என்பதை தேர்ந்தெடுக்கும் கட்டம் இது. வருகின்ற ஜனவரி 21 அன்று மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட இறுதிச் சுற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
நட்சத்திரங்களின் மென்டர்களாக இருக்கும் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் மற்றும் நடிகர் ஷக்தி ஆகியோருடன் சிறப்பு நடுவராக நடிகை ராதா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நேயர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இறுதிச் சுற்று மேடையில் சிந்து ஷியாம், வந்தனா, RJ சிந்து, வனிதா, சுஜிதா, மோனிகா மற்றும் ஸ்ரீவித்யா பங்கு கொள்கிறார்கள். இறுதிச் சுற்றில் வைக்கப்படும் சுற்றுகள் மூலம் ஐந்து நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். இதிலிருந்து ஒருவர் Mrs. சின்னத்திரை பட்டத்தைத் தட்டிச் செல்வார்.
ராஜா ராணி புகழ் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்கள் இறுதிச் சுற்றில் விருந்தளிக்க உள்ளார்கள்.
Mrs. சின்னத்திரை மகுடத்தை சூட்டப் போவது யார் என்பது வரும் 21ம் தேதி தெரிந்துவிடும்.