விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்

விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ சீசன் 2, கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி முதல், செப்டம்பர் 30ம் தேதி வரை ஒளிபரப்பானது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா வெற்றி பெற்று 50 லட்ச ரூபாய் பரிசு பெற்றார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் பிக் பாஸ் நட்சத்திரங்கள் ஒரு குடும்பமாக ஒன்று கூடி கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சி ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இதில் மகத், ஜனனி, ரித்விகா, ஷாரிக், பொன்னம்பலம், என்எஸ்கே ரம்யா, மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

யாஷிகா, ஐஸ்வர்யாவின் நடனங்கள், மற்றும் பல கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் இடம் பெற உள்ளது.

Read Previous

எனது சூப்பர் நண்பன், இயக்குனர் மகேந்திரன் பெருமிதம்

Read Next

‘திமிரு புடிச்சவன்’ டீசர், யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1

Most Popular