விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’.
இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்தே டீசரின் பார்வைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
யு டியூப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ‘திமிரு புடிச்சவன்’ டீசர், தொடர்ந்து டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
விஜய் ஆண்டனி முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷா இயக்குகிறார்.
தீபாவளி வெளியீடாக ‘திமிரு புடிச்சவன்’ வெளிவர இருக்கிறது.