எனது சூப்பர் நண்பன், இயக்குனர் மகேந்திரன் பெருமிதம்

‘முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை’ என மூன்று தமிழ்ப் படங்களில்  இயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து பணியாற்றியது.

ரஜினிகாந்தின் ஆரம்ப கட்டங்களில் அவரால் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா என வியக்க வைத்த படங்கள்தான் ‘முள்ளும் மலரும், ஜானி’. ரஜினிக்குள்ளும் இருக்கும் நடிகனை வெளிக் கொண்டு வந்தவர் இயக்குனர் மகேந்திரன்.

இத்தனை ஆண்டுகள் ஆனாலும், ‘முள்ளும் மலரும், ஜானி’ ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களாக இருந்து வருகின்றன.

அப்பேர்ப்பட்ட கூட்டணி நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதற்காக காசி சென்றிருக்கும் அவரும், ரஜினிகாந்தும் இணைந்து எடுத்த புகைப்படங்களை இயக்குனர் மகேந்திரன் பேஸ்புக்கில் ‘எனது சூப்பர் நண்பன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ரஜினியுடன் நடிகராக இணைந்துள்ள மகேந்திரன், இயக்குனராக இணைந்தால் ஒரு நல்ல தமிழ் சினிமா கிடைக்கும். இணைவார்களா ?.

Read Previous

‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை

Read Next

விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம்

Most Popular