விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’

விஜய் டிவியின் மிகப் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி ‘கலக்க போவது யாரு’.

இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று ஜனவரி 19 முதல், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ்த் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களைத் தந்துள்ள இந்த நிகழ்ச்சி, இந்த புதிய சீசனிலும் பல புதிய திறமையாளர்களை அங்கீகரிக்க உள்ளது.

கடந்த சில சீசன்களில் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருந்த ஈரோடு மகேஷ், பாலாஜி, இந்த சீசனில் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர். அதோடு, போட்டியாளர்களுக்கு மென்டர்களாகவும் செயல்பட உள்ளார்கள்.

தமிழ் திரையுலகையே தன் காமெடியால் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை கோவை சரளா, 80களின் முன்னணி நாயகியான ராதா இந்த சீசனின் நடுவர்களாக பொறுப்பேற்றுள்ளார்கள்.

Read Previous

தமிழரசன் – படத் துவக்க விழா – புகைப்படங்கள்

Read Next

விஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’

Most Popular