விஜய் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 8 மணி முதல் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட 6 டப் தொடர்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன.
இந்த வரிசையில் ஹிந்தி மற்றும் வங்காள மொழிகளில் பிரபலமான தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளன.
தினமும் காலை நன்றாக தொடங்க, பக்தியூட்டும் காவிய தொடர்களுடன் ஆரம்பிக்க, சிவ பெருமானின் அற்புதங்களை கூறும் பிரம்மாண்ட காவியத் தொடர் ‘மஹாதேவ்’ தொடர் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ஷக்தி தேவிக்கும் சிவ பெருமானுக்கும் இடையில் உள்ள பந்தத்தினால் இவ்வுலகத்தில் ஏற்படும் மாறுபாடுகளே இத்தொடரின் கரு.
ராமாயண காவியத்தை சீதையின் பார்வையிலிருந்து கூறும் ‘சீதையின் ராமன்’ தொடர் இனி காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதனைத் தொடர்ந்து ‘மங்கையின் சபதம்’ என்னும் பிரம்மாண்ட காவியத் தொடர் காலை 9.30 முதல் ஒளிபரப்பாகிறது. இது பழங்கால ஹிந்து புராணக் கதையை தழுவப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு தொடர்.
தன் குடும்ப மானத்தை காப்பாற்ற தீய சக்திகளுடன் போராடும் பெண்னுடைய மாறுபட்ட கதை ‘கிரண் மாலா’. இது தினமும் காலை 10 மணி முதல் தொடாங்கவுள்ளது.
நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வைச் சுற்றி அமையும் தொடர் ‘என்னுடைய தோட்டத்தில்’, தினமும் காலை 10. 30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒரு குழந்தையை சுற்றி நடக்கும் குழந்தை காவியம் ‘அம்மா’, இது தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வித்தியாசமான கதைக் களத்தில் அமையும் ஒரு காதல் கதை ‘என்றும் அன்புடன்’. இது தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
“வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் காலையில் தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வரும்போது அவர்களுக்கு பொழுதுபோக்கு விருந்தளிப்பதில் விஜய் டி. வி பெருமிதம் கொள்கிறது. இந்த விஜய் காவிய நேரத்தில் பிரமாண்டமான புராண கதைகளும், சமூக நாடகங்களும் இடம் பெறுவதால் இதை பெண்கள் கண்டிப்பாக விரும்புவர்,” என்கிறார் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பாளர் ஆர். பாலசந்திரன்.
வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை விஜய் தொலைக்காட்சியில் இந்த டப்பிங் தொடர்கள் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன.
விஜய் டிவி – காவிய நேரம் – டப்பிங் தொடர்கள்
காலை – 8 மணி – மஹாதேவ்
9 மணி – சீதையின் ராமன்
9.30 மணி – மங்கையின் சபதம்
10 மணி – கிரண் மாலா
10.30 மணி – என்னுடைய தோட்டத்தில்
11 மணி – அம்மா
11.30 – என்றும் அன்புடன்