சூர்யாவுக்கு கொரானோ பாதிப்பு

நடிகர் சூர்யா தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் விரைவில் நலமடைய பிரார்த்திப்பதாக பல சினிமா பிரபலங்களும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

சூர்யா சில தினங்களுக்கு முன்பு மும்பை சென்றுவிட்டு சென்னை திரும்பினார். பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்,” என தன் உடல்நலன் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூர்யா.

Read Previous

மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்துள்ள படம்

Read Next

பிப்ரவரி 8ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular