சிம்பு – தேசிங்கு பெரியசாமி படப்பிடிப்பு எப்போது ?

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியவந்துள்ளது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி தொடங்கி பல்வேறு நாயகர்களிடம் கதைகள் கூறிவந்தார் தேசிங்கு பெரியசாமி. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பலரும் தயங்கினார்கள். இறுதியில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, சிம்பு நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனால், நீண்ட நாட்களாக தயாரிப்பிலேயே இருக்கிறது. இன்னும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்தவொரு பணியுமே ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் இந்தப் படத்தின் நிலைக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

உண்மையில், இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதால் பொருட்செலவினை எந்த வகையில் எல்லாம் குறைக்கலாம் என பணிபுரிந்து வருகிறது படக்குழு. மேலும், படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையை விற்பதற்கும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. யாருமே படக்குழுவினர் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுக்க முன்வரவில்லை.

இதனிடையே, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகிவிட்டார். இதனை தயாரித்து வரும் ராஜ்கமல் நிறுவனம் அவருக்கு பதிலாக சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளது. சிம்பு கொடுத்துள்ள தேதிகளை முதலில் ‘தக் லைஃப்’ படத்திற்கு உபயோகிக்க முடிவு செய்துவிட்டது.

‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் காட்சிகளை ஏப்ரலில் தொடங்கவுள்ளார்கள். அது முடிவடைதற்குள், தேசிங்கு பெரியசாமி படத்தில் இருக்கும் சிக்கல்கள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும் என்று தயாரிப்பு தரப்பு நினைக்கிறது.  தற்போதைய சூழலில் சிம்பு – தேசிங்கு பெரியசாமி இணையும் படம் ஜூன் மாதத்திற்கு மேல் தான் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், ‘அமரன்’ படத்தின் பணிகளை முடித்து விரைவில் வெளியிடவும் முனைப்புடன் பணிபுரிந்து வருகிறது ராஜ்கமல் நிறுவனம்.

Read Previous

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வல்லவன் வகுத்ததடா பட ட்ரெய்லர்

Read Next

பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ்

Most Popular