கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
சேலத்தில் பிறந்து, தமிழகத்தில் பல்வேறு கிரிக்கெட் பிரிவுகளில் விளையாடி இறுதியாக இந்திய அணியில் தேர்வாகி விளையாடியவர் நடராஜன். ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். இடது கை பவுலரான இவருக்கு திரையுலகில் பலரும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
தற்போது இவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியினை நடராஜன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் “எப்போது சொல்லுங்கள் என்று சிவகார்த்திகேயன் சொன்னார். நானோ சீசன் எல்லாம் முடித்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளேன். அவரே தான் தயாரித்து, நடிப்பதாக சொல்லியிருக்கிறார்” என நடராஜன் தெரிவித்துள்ளார்.
Tags: natrajan sivakarthikeyan