‘டாணாக்காரன்’ இயக்குநர் இயக்கத்தில் கார்த்தி

‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டாணாக்காரன்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு பெரிய நடிகருக்கு கதை ஒன்றிணை எழுதி வந்தார் தமிழ்.

அந்தக் கதையினை தயாரிக்க, ‘டாணாக்காரன்’ படத்தினை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு முன்வந்தார். அக்கதையின் பணிகள் முடிந்தவுடன் கார்த்தியை சந்தித்து பேசினார்கள். முழுமையாக அக்கதையினை கேட்டுவிட்டு, கார்த்தி நடிக்க சம்மதம் தெரிவித்து தேதிகள் ஒதுக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தொடங்கி ஒரே கட்டமாக முழுபடப்பிடிப்பும் நடைபெறவுள்ளது. தமிழ் படத்தினை முடித்துவிட்டு, ‘கைதி 2’ படத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார் கார்த்தி.

‘கைதி 2’ படத்தினையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் ‘கைதி 2’ என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அதிதி ஷங்கர் செம எனர்ஜியாக உள்ளார் – இயக்குனர் விஷ்ணு வர்தன்

Read Next

நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்