மீண்டும் இணையும் சூர்யா – சிவா கூட்டணி

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா – சிவா கூட்டணி இணைந்து படம் பண்ணவுள்ளார்கள்.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோ, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் காட்சி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா – சிவா இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவாகியுள்ளது. இதனால் சூர்யா – சிவா இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண முடிவு எடுத்துள்ளார். ஆனால், இது உடனே நடக்காது.

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சிவா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்தப் படத்தினை முடிக்கும் போது, சூர்யாவின் தேதிகளும் இருந்தால் இருவரும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார்கள்.

Read Previous

நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்

Read Next

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது? – தயாரிப்பாளர் பதில்