ஆழமான கதைக்கருவுடன் வெளிவரும் ‘சினம்’

மூவி ஸ்லைட்ஸ் பி. லிட்., சார்பில் ஆர் விஜயகுமார் தயாரிப்பில், ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி மற்றும் பலர் நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் ‘சினம்’. 

செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப் பிரபலங்களும் படத்தின் குழுவினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் ஹரி பேசுகையில்,

படத்தின் டிரைலரைப் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது.  படத்தின் கதைக் கரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் எனத் தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும், இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,

அருண் விஜய்யின் அர்ப்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்படக் கூடிய நபர். இந்த படத்திலும் முழு உழைப்பைத் தந்துள்ளார். விஜயகுமார் சார்  உடன் சேர்ந்து இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார் அதற்கு எனது வாழ்த்துகள். இயக்குனர் குமரவேலன் திறமையான நபர், அவருடைய முந்தைய படங்கள் அவருடைய ஆழமான கதையமைப்பை வெளிக் காட்டியது. ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் விஷுவலை பார்க்க நான் காத்திருக்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள்.

சாந்தனு பேசுகையில்,

அருண் விஜய்யின் பயணம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகிற  ஒன்று. தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி  கடின உழைப்பைக் கொடுத்து தனக்கென தனிப்பாதையை உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பைக் கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

விஜய் ஆண்டனி பேசுகையில்,

அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்குக் கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டி ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்குத் தெரியாது. இயக்குனர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்தப் படத்தில் சிறப்பான  பணியைக் கொடுத்துள்ளார்.  

இயக்குனர் மகிழ் திருமேனி பேசுகையில்,

அருண் விஜய் இப்பொழுது பெரிய வெற்றியை அடைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரக் கூடியது. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பது அவருடைய அனைத்து வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பில் தெளிவாகத் தெரிகிறது. விஜயகுமார் சார் மிகவும் திறமை வாய்ந்த, அதே நேரத்தில், மனிதநேயம் மிக்க ஒரு நபர். இயக்குனர் குமரவேலனுடைய அனைத்து படங்களையும் ரசிகர் போல் பார்ப்பவன் நான். இந்தப் படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

பிரசன்னா பேசுகையில்,

பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார்  திறமை எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு, படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் பார்த்திபன் பேசுகையில்,

அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது, அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் பாடல்கள் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள்.

ஒளிப்பதிவாளர் கோபிநாத் பேசுகையில்,

இது ஒரு குடும்பப் படம், அருண் விஜய் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தை பார்த்து உங்களுடைய வாழ்த்துக்களை கூறுங்கள்.

இசையமைப்பாளர் சபீர் பேசுகையில்,

மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் பணியாற்றியுள்ளோம். அருண் விஜய் சார் ஒரு பாடல் பாடியுள்ளார், அந்தப் பாடல் சுலபமானது அல்ல, அது தொழில்முறை ஆட்களால் மட்டுமே உணர்வுடன் வெளிக்காட்ட முடியும், அதை அவர் கொடுத்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் கதையோடு சேர்ந்து பயணிக்கும் படி இருக்கும். இயக்குனர் குமரவேலன், ஆக்‌ஷன், எமோஷன், அதே நேரத்தில் சமூகத்துடன் சார்ந்து நிற்கும் திரைப்படத்தை உருவாக்கக் கூடியவர், அவர் உடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். இந்தப் படம் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் பேசுகையில்,

என்னுடைய படத்திற்கு பாராட்டுக்களையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையைக் கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தைக் கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்கக் கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்தப் படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.

நடிகை பாலக் லால்வாணி பேசுகையில்,

இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன்னு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் மேல் நம்பிக்கை வைத்த இயக்குநர், அருண் விஜய் மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக நல்ல படம் தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

அருண் விஜய் பேசுகையில்,

இந்தப் படம் தியேட்டர்களில்தான் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரி வெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படங்களுக்கும் இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்தப் படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு நன்றி. இந்த படத்தைத் தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். 

படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஜயகுமார் பேசுகையில்,

படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது சொந்தப் படமாக நினைத்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

Read Previous

‘விடுதலை’ முதல் பாகத்தின் வெளியீடு, விரைவில் அறிவிப்பு

Read Next

உறியடி விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Most Popular