சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்க, ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத், சான்வி மேக்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
‘மாவீரன், 3 பிஹெச்கே, விக்ரம் 63’ படங்களுக்குப் பிறகு சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் 4வது படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜனவரி 21, பூஜையுடன் ஆரம்பமானது. முழு படப்பிடிப்பும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45–50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாலசரவணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனிக்க, கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் மேற்கொள்ள உடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் செய்கிறார்.