14 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி

இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இணைந்த கூட்டணியில் வெளிவந்த ‘‘காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆடவாரி மாடலக்கு அர்த்தாலே வேறுலே (தெலுங்கு), என்ஜிகே” ஆகிய படங்களின் இசை பெரிதும் பேசப்பட்டவை.

செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி இணைந்த ‘காதல் கொண்டேன், புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களே அந்தக் கூட்டணியை இன்றளவுக்கும் கொண்டாட வைத்து வருகிறது.

அந்த மூவர் கூட்டணி ‘புதுப்பேட்டை’ படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளது.

இதற்கான அறிவிப்பை படத்தின் இயக்குனர் செல்வராகவன் இன்று வெளியிட்டார். யுவனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “யுவனுடன் 8வது முறையாக இணைவது மிகவும் மகிழ்ச்சி,” என டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதை ரிடிவீட் செய்து யுவன், “இங்கும் இப்படித்தான், இதற்காகக் காத்திருக்கிறேன்,” என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “என் தயாரிப்பில் தனுஷ், செல்வராகவன், யுவன், இந்த மாபெரும் வெற்றிக் கூட்டணி இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்றும் பதிவிட்டுள்ளார்கள்.

ஒரு இனிமையான கூட்டணி இத்தனை வருடங்கள் கழித்து இணைவதை அவரவர் ரசிகர்கள் வரவேற்றுப் பாராட்டி வருகிறார்கள்.

Read Previous

கொரானோ தொற்று பரவல், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து

Read Next

டிசம்பர் 24ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular