சசிகுமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம்

நடிகர் சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரிய, கலையரன் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்தது.

கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக உள்ளது.

‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.

இமான் இசையமைப்பில், ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பங்கேற்கிறார்.

இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற பூஜையில் நடிகர் சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிஇஓ ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா, ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Read Previous

‘தம்பி’ – டிசம்பர் 20ல் ரீலீஸ்

Read Next

தமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்

Most Popular