அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படம் ஆரம்பம்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்க, சற்குணம் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அதர்வா முரளி, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் ஆரம்பமானது.

லைக்கா நிறுவனத்தின் 22வது தயாரிப்பாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ராதிகா சரத்குமார், ஜேபி, ஆர்கே சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே,  சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கொரானோ கட்டுப்பாடு விதிகளின் படி, பலத்த சோதனைக்குப் பிறகே படக்குழுவினர் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்களாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளது.

Read Previous

ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக நடிக்கும் நபா நடேஷ்

Read Next

பிரபுதேவா நடிக்கும் ‘பொய்க்கால் குதிரை’ முதல் பார்வை வெளியீடு

Most Popular