பிரபுதேவா நடிக்கும் ‘பொய்க்கால் குதிரை’ முதல் பார்வை வெளியீடு

'ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கியவரும், 'இரண்டாம் குத்து' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். 

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பொய்க்கால் குதிரை'. இப்படத்தில்  பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர்  நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும், இப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் படமாகத் தயாராகும் இப் படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். 
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தற்போது படத்தின் முதல் பார்வை போஸ்டரை, படத் தலைப்புடன் வெளியிட்டுள்ளார்கள்.

Read Previous

அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படம் ஆரம்பம்

Read Next

ஜெய் பீம், உடன்பிறப்பே, ஓ மை டாக், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – ஓடிடி வெளியீடு

Most Popular