ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக நடிக்கும் நபா நடேஷ்

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இளம் நடிகையாக இருக்கும் நபா நடேஷ் அடுத்து பாலிவுட்டிற்கும் செல்கிறார்.

2015ல் கன்னடத்தில் வெளிவந்த ‘வஜ்ரகயா’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். அதற்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

புகழ் பெற்ற நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக் கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கில் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர்.

கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சுமார் 275 கோடி ரூபாய். 

ஹிந்தியில் ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிதினுடன் நபா நடேஷ் இணைந்து நடித்துள்ள ‘மேஸ்ட்ரோ’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்து பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் நபா. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிரித்திக் ரோஷன் நடிக்க உள்ள வெப் தொடரில் அவருக்கு ஜோடியாக நடிக்க நபா நடேஷ் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹிரித்திக் ரோஷன் நடிக்க உள்ள முதல் வெப் தொடர் இதுதான். தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் பெயரெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் நபா நடேஷ்.

Read Previous

சூர்யா வெளியிட்ட ‘கூகுள் குட்டப்பா’ முதல் பார்வை

Read Next

அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படம் ஆரம்பம்

Most Popular