உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘மாரி 2’.
இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் வெளியானதுமே உடனடி சூப்பர் ஹிட் ஆனது. யு டியூபில் இந்த வருடம் ஜனவரி 2ம் தேதி முழுமையான வீடியோ பாடலை வெளியிட்டார்கள்.
வெளியான நிமிடத்திலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளை படைத்தது. தற்போது 318 நாட்களில் 700 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.
700 மில்லியன் கடந்து வந்த பாதை
100 மில்லியன் – 18 நாட்கள்
200 – 42
300 – 70
400 – 106
500 – 152
600 – 224
700 – 318 நாட்கள்
இந்திய அளவில் இதற்கு முன் 700 மில்லியன் சாதனையை 446 நாட்களில் ‘ஸ்வக்சேஸ்வகத்’ என்ற பாடலும், 481 நாட்களில் ‘லாகூர்’ பாடலும் படைத்திருநதன.
ஆனால், ‘ரௌடி பேபி’ பாடல் 318 நாட்களிலேயே அந்த சாதனையைப் புரிந்துள்ளது.
இந்த 700 மில்லியன் சாதனையைப் படைக்கும் நாளில் மட்டும் 9 லட்சம் பார்வைகள் புதிதாக வந்துள்ளன. தற்போது 700 மில்லியனுடன் கூடுதலாக 17 லட்சம் பார்வைகளும் கடந்த இரண்டு நாட்களில் கிடைத்துள்ளன.
அடுத்து 800 மில்லியன் சாதனையை நோக்கி ‘ரௌடி பேபி’ போய்க் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றிற்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை இது.