தனுசு ராசி நேயர்களே, கலகலப்பான படம்

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”

இயக்குனரும், நடிகருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘பிகில்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான படம் என்பதைச் சொல்லிவிடும். ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனையும் அதனைத் தொடர்ந்த சுவாரசியமான சம்பவங்களும் கலகலப்பாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி.

“இந்தப் படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா சார்தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள்.

ராசியை நம்பும் ஒரு ஹீரோ, அவரது ராசிக்கேற்ற ஹீரோயினைக் கல்யாணம் செய்து கொள்ள தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்க கூடிய படமாக இருக்கும்.

படத்தின் நாயகனாக நடிக்க ஹரீஷைத்தான் முதலிலேயே அணுகினோம். எதிர் வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ். அவர் அந்தக் கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

படத்தின் டீசரைப் பார்த்து பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது.

நாயகியின் பெயர் கேஆர் விஜயா, ஒரு மாற்றத்திற்காகத்தான் அந்தப் பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகிகளாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையில் 5 பாடல்கள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Read Previous

ரௌடி பேபி – 318 நாளில் 700 மில்லியன் சாதனை

Read Next

தனுசு ராசி நேயர்களே – டீசர்