பெரும் விலைக்கு ‘சைரன்’ விற்பனை

ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமை பெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா ப்ரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் வெளியீடாக அறிவிக்கப்பட்டது.

தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமை விற்பனை ஆகாத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமையை விஜய் டிவி நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

இது ஜெயம் ரவி நாயகனாக நடித்த படங்களில் அதிக விலைக்கு விற்பனையான படம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

தற்போது பிப்ரவரி 16-ம் தேதி ’சைரன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Read Previous

விஜயகாந்த் மகனுக்கு லாரன்ஸின் உதவி

Read Next

’வேட்டையன்’ படத்தின் புதிய அப்டேட்

Most Popular