வீடியோவில் பேசியதை நிஜமாக்கி, விஜயகாந்த் மகன் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் லாரன்ஸ்.
சமீபத்தில் தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். இதில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுக்கு திரையுலகில் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் என்று திரையுலகினர் சிலர் தெரிவித்திருந்தனர்.
சண்முகபாண்டியன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தயார் என்று வீடியோ வெளியிட்டிருந்தார் லாரன்ஸ். தற்போது அதனை நிஜமாக்கி இருக்கிறார். அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘படை தலைவன்’. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு விஜயகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு ‘படை தலைவன்’ படத்தின் டீஸர் வெளியானது. இந்தப் படத்தில் தனக்காக கெஸ்ட் ரோல் ஒன்றை தயார் செய்யுமாறு இயக்குநர் அன்புவிடம் பேசியிருக்கிறார் லாரன்ஸ். இதற்காக பிப்ரவரி மாதத்தில் 5 நாட்கள் தேதிகளும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.
வீடியோ பேசியது மட்டுமன்றி, உடனடியாக லாரன்ஸ் செய்தும் காட்டியிருப்பதால் சண்முக பாண்டியன் மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்கிறார்.