தயாரிப்பாளரைத் திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்

முன்னணி தயாரிப்பாளரான ஜாக்கி பக்னானியைத் திருமணம் செய்யவுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, பின்பு தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழில் இவருடைய முதல் படம் ‘தடையறத் தாக்க’. பின்பு தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது கமலுடன் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்திப் படங்களில் நடிக்கும் போது, இவருக்கும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானிக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாகி இருவரும் ஒன்றாக வலம் வரத் தொடங்கினார்கள். இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது.

தற்போது பிப்ரவரி 22-ம் தேதி இருவரும் கோவாவில் திருமணம் செய்ய உள்ளார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை இரு வீட்டாரும் தொடங்கியுள்ளனர்.

Read Previous

வடசென்னை பின்னணியில் வெளிவரும் காத்து வாக்குல ஒரு காதல்

Read Next

ஆண்டின் இறுதி நாளில் 11.25 கோடியை வசூலித்த டங்கி

Most Popular