மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தின் நிலை குறித்து ராஜமெளலி பேசியிருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ஜப்பானில் இத்திரைப்படம் சுமார் 500 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைக் கொண்டாடும் விதமாக ராஜமெளலி கலந்து கொண்ட சிறப்பு திரையிடல் ஜப்பானில் நடைபெற்றது.
இதில் ராஜமெளலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்தப் படம் குறித்த கேள்விக்கு ராஜமெளலி கூறியதாவது:
“அடுத்தப் படத்திற்கான கதையை முழுவதுமாக முடித்துவிட்டோம். தற்போது ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதில் மகேஷ் பாபு நாயகனாக நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து, ஜப்பானில் திரையிடும் போது அவரை அழைத்து வருகிறேன்”
இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்