மிஷ்கினின் ‘சைக்கோ’, ஜனவரி 24 வெளியீடு

டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சைக்கோ’.

இப்படத்தை உலகமெங்கும் ஜனவரி 24 முதல் வெளியிட உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தெரிவித்துளளார்.

“இந்த மிகக் குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்குத் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் ‘சைக்கோ’ திரைப்படத்தை எனக்குக் கிடைத்த பரிசாகவே நினைக்கிறேன். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இது ஒரு அற்புதமாகவே நிலைத்திருக்கிறது.

இயக்குநர் மிஷ்கினின் திறமையான எழுத்து மற்றும் இயக்கம், வெகு திறமையான நடிகர்களான உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரின் வித்தியாசமான அவதாரம் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கிறது.

எங்களது கடின உழைப்பு மற்றும் படத்தின் உண்மையான கருத்தாக்கத்தை புரிந்துகொண்டு எங்களது ‘சைக்கோ’ டைட்டிலை அனுமதித்ததற்கு சென்சார் போர்ட் உறுப்பினர்களுக்கு எனது மிகப் பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது “சைக்கோ” படத்தினை இந்தியா முழுதும் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் நேர்த்தியும் மொழிகடந்து உலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களையுமே ஆச்சர்யபடுத்தும்.

வரும் 2020 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிட உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் முதல் மிகப் பெரிய வெளியீடாக இருக்கும்.

ஒரு பார்வையாளனாக ‘சைக்கோ’ படத்தைப் பார்த்த போது எனக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை அளித்தது இத் திரைப்படம். ரசிகர்களை பல அடுக்குகளுக்கு இழுத்துச் சென்று, இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் ஒரு திரில் பயணமாக இருக்கும்.

இசைஞானி இளையாராஜாவின் உயிர் உருக்கும் இசையில் இத்திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒரு மாறுபட்ட திரைஅனுபவமாக இருக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர்.

Read Previous

கடைசி விவசாயி – ஒரு விவசாயியின் வாழ்வியல்

Read Next

சூர்யா, வெற்றிமாறன் புதிய கூட்டணி

Most Popular