பிரபுதேவா நடிக்கும் புதிய ஆக்ஷன் படம்

ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க புதிய படம் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

இப்படத்தில் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். 

படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்,''பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக இப்படம் தயாராகிறது.  இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும்,''என்றார்.

Read Previous

கணம் – 30 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வரும் அமலா

Read Next

‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்