கணம் – 30 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வரும் அமலா

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். 

“மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மெவுனம் சம்மதம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். 

1991-ல் ‘கற்பூர முல்லை’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்த அமலா, பின்னர் நடிகர் நாகார்ஜுனாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நடிப்பை விட்டு விலகியே இருந்தார். 

30 வருடங்களுக்குப் பிறகு தற்போது, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கணம்‘ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார் அமலா. ஸ்ரீகார்த்திக் இயக்கும் இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். 2015-ல் வெளியான ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்திற்குப் பிறகு ஷர்வானந்த் நடிக்கும் தமிழ்ப் படம் இது.

ஷர்வானந்த் ஜோடியாக ரீது வர்மா நடிக்கிறார். மற்றும் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘துருவங்கள் 16, மாஃபியா’ படங்களுக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

Read Previous

சினிமா பிரபலங்கள் பாராட்டும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ 

Read Next

பிரபுதேவா நடிக்கும் புதிய ஆக்ஷன் படம்

Most Popular