மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ 2 பாகங்களாக வெளியாகவுள்ளது.
லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இதில் சோனாலி குல்கர்னி, ஹரிஷ் பேரடி, மனோஜ் மோசஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தினை ராஜஸ்தானில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சுமார் 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளது படக்குழு. முதலில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தினை ஒரே பாகமாகவே வெளியிட திட்டமிட்டார்கள்.
தற்போது படத்தின் கதையை முடிக்காமல் எடிட்டிங்கை முடித்து தணிக்கை செய்துள்ளது படக்குழு.
இதன் மூலம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் 2-ம் பாகம் வெளியாக வாய்ப்பிருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. மோகன்லால் மற்றும் லிஜோ ஜோஸ் இருவருமே தாங்கள் ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன், 2-ம் பாகத்தினை தொடங்கி 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.