‘காபி வித் டிடி’யில் ‘ஓ காதல் கண்மணி’ கூட்டணி

விஜய் டிவியின் புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சியான ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியில் தமிழ்ப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சியில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் வெற்றிகரமான கூட்டணியான இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, துல்கர் சல்மான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அநேகமாக, தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மணிரத்னம், ரகுமான், வைரமுத்து ஆகியோர் ஒன்றாக பங்கு பெறும் பேட்டியாக இது அமைந்துள்ளது.

மணிரத்னம் படம் என்றாலே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், வைரமுத்துவும் தனி கவனம் செலுத்தி பாடல்களைக் கொடுப்பார்கள். ‘ஓ காதல் கண்மணி’ படத்திலும் அப்படிப்பட்ட பாடல்கள்தான் அமைந்துள்ளதென இசை ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

விஜய் டிவியின் தமிழ்ப் புத்தாண்டு தின ‘காபி வித் டிடி’யில் தங்களது கூட்டணி பற்றிய அனுபவங்களை மூவரும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

Read Previous

‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலிய அழகி ‘அமெண்டா’…

Read Next

விஜய் டிவி – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்