தலைப்பைப் பார்த்ததும் ஆச்சரியப்பட வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு நிகழ்வு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
எம்ஜிஆர் நடிக்க அனிமேஷன் திரைப்படமாக உருவாக உள்ள ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தைத்தான் ரஜினிகாந்த் நாளை ஆரம்பித்து வைக்க உள்ளார்.
அருள்மூர்த்தி-யின் அனிமேஷன், கதை, திரைக்கதை, இயக்கத்தில், இமான் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில் இப்படம் உருவாக உள்ளது.
படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே. கணேஷ், பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பாக பிரபுதேவா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
நாளை எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆரம்பமாகும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம் அடுத்த வருடம் 2019ம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.
நாளை நடைபெற உள்ள படத் துவக்க விழாவில், எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.