விஜய் சேதுபதியின் 25வது படம் ‘சீதக்காதி’

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் வரவேற்பிற்குப் பிறகு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக மாற்றியது.

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது ஆறேழு படங்களுக்கும் மேல் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் 25வது படமான ‘சீதக்காதி’ படத்தின் அறிவிப்பு, இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

‘நிபுணன்’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ‘சீதக்காதி’ படத்தை, சுதந்த சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மற்றும் விரைவில் வரவுள்ள ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். கோவிந்த் மேனன் படத்திற்கு இசையமைக்கிறார்.

விரைவில் ‘சீதக்காதி’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

வெளிநாட்டு விருதுக்கு ‘மெர்சல், விஜய்’ போட்டி

Read Next

ரஜினிகாந்த் துவக்கி வைக்கும் எம்ஜிஆர் படம்