‘காளி’ சிங்கிள் பாடல் வரும் 24ம் தேதி வெளியீடு

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் ‘காளி’.

இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்து, கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி, சுனைனா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோருடன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதனன், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மனைவியான கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கி வருகிறார்.

ரிச்சர்ட் M நாதனின் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில் , சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில், பிருந்தாவின் நடன இயக்கத்தில் ‘காளி’ உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக ரசிகர்களைக் கவரும் விதத்தில் அனைத்துப் பாடல்களையும் விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளாராம். படத்தின் முதல் சிங்கிள் பாடலை வரும் ஜனவரி 24ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

Read Previous

ரஜினிகாந்த் துவக்கி வைக்கும் எம்ஜிஆர் படம்

Read Next

Junga – Official Title Teaser

Most Popular