ஸ்ரீதேவி மறைவு, தொடர்ந்து டிவீட்டும் ராம்கோபால் வர்மா

நடிகை ஸ்ரீதேவிக்கு திரையுலகத்திலேயே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்திய அளவில் புகழ் பெற்ற சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா முக்கியமானவர்.

ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கில் படங்களை இயக்கியவர் அவரின் தீவிரமான ரசிகரும் கூட. தினமும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் பாடல்களைப் பார்க்காமல் தூங்க மாட்டேன் என்று கூட சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீதேவியின் மறைவு மற்றவர்களை விட ராம் கோபால் வர்மாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து ஸ்ரீதேவி பற்றி அவர் புகைப்படங்களையும், அவருடைய வருத்தங்களையும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்.

“கடவுளே என்னை மட்டும் விட்டுவிட்டு ஸ்ரீதேவியை அழைத்துக் கொண்டது ஏன்” என கடவுளைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் கூட இந்த அளவிற்கு வருத்தப்படுவாரா என்பது சந்தேகம்தான். ஸ்ரீதேவி மீதான ராம்கோபால் வர்மாவின் பாசம் புல்லரிக்கவே வைக்கிறது.

 

Read Previous

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம், திரையுலகினர் இரங்கல்

Read Next

ஸ்ரீதேவி மறைவு, நடிகர் சிவகுமார் இரங்கல்

Most Popular