ஸ்ரீதேவி மறைவு, நடிகர் சிவகுமார் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மறைவு குறித்து நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்குத் தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி.

‘ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக் கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.

‘16வயதினிலே’ மயில்-ஐ தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. ‘மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு’ என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள்.

நானும் ஸ்ரீதேவியும் ‘கவிக் குயில், மச்சானனை பார்த்தீங்களா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ ஆகிய மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்,” என சிவகுமார் அவரது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Read Previous

ஸ்ரீதேவி மறைவு, தொடர்ந்து டிவீட்டும் ராம்கோபால் வர்மா

Read Next

ஸ்ரீதேவி நடித்த படங்களின் இனிமையான பாடல்கள்…வீடியோ