அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்

இந்தியத் திரையுலகின் முக்கியமான நடிகையான ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை, 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார்.

நேற்று மலைதான் அவருடைய உடல் இந்தியாவுக்கு வந்தது.

இன்று காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி உடல், மதியம் 2 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விலி பார்லே சேவ சமாஜ் கிரிமடோரியம் மற்றும் இந்து சிமிட்ரியில் மாநில அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் பல பிரபலமான ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு ஸ்ரீதேவிக்கு கடைசி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கதாநாயகியாக உயர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பிரபலமடைந்து இந்தியத் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கியவர் ஸ்ரீதேவி.

அவருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

Read Previous

பாடகர் ஆன விஜய் சேதுபதி

Read Next

கர்நாடக முதல்வரிடம் விருது பெறும் மணிரத்னம்

Most Popular