விஜய் டிவியில் புத்தம் புதிய அசத்தலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
‘வில்லா டு வில்லேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வில்லாவில் வாழ்ந்து பழகியவர்கள் வில்லேஜில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
நகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், கிராமத்து வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியில் பார்க்கலாம். பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதான் போட்டி.
அந்த கிராமத்தில் அவர்களுக்கு கொடுக்கப்படும் தினசரி பணிகள் மற்றும் சவால்களை அவர்கள் செய்து முடித்தால் தான் அங்கு தாக்கு பிடிக்க முடியும். அந்த கிராமத்தின் மக்கள் தான் இந்த போட்டியாளர்களுக்கு நடுவர்கள். இந்த நகரத்து அழகிகளும் அந்த மக்களுக்கு தங்களால் கிராமத்து வாழ்க்கையையும் வாழ்ந்துகாட்ட முடியும் என்பதை நிருபித்துக் காட்டவேண்டும்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகவும் அமையும். அந்த கிராமத்து வாழ்க்கையை அழகாகக் கையாண்டு வாழ்ந்து காட்டும் ஒரு போட்டியாளர் அழகியாக பட்டம் சூட்டப்படுவார்.
இப்படி சுவாரசியமும் குதூகலமும் நிறைந்த இந்த நிகழ்ச்சியை ஆண்ட்ருஸ் தொகுத்து வழங்கப் போகிறார்.
அந்த 12 போட்டியாளர்கள் யார் என்பதைத் வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ள இந்த புத்தம் புதிய நிழச்சியின் தொடக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 10 முதல் சனி மற்றும் ஞாயிறு, இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.