நயன்தாரா நடித்து கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் அவருடைய நடிப்பைப் பற்றி அதிகம் பேச வைத்த படம் 2016ம் ஆண்டு வெளிவந்த ‘நானும் ரௌடிதான்’.
அந்தப் படத்தில் காது கேட்க முடியாத ஒரு பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். படத்தில் அவருடைய தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்துமே அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
அந்தப் படத்தில் ஒரு பாவாடை, சட்டை, தோளில் ஒரு பேக் என மிக எளிமையான ஆடை வடிவமைப்பில்தான் படம் முழுவதும் வந்தார்.
மீண்டும் அதே மாதிரியான ஒரு தோற்றத்தில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்திருக்கிறார். அதே பாவாடை, சட்டை, தோளில் பேக்கிற்குப் பதிலாக முதுகில் பேக் என நடித்திருக்கிறார் போலிருக்கிறது.
அப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையங்களில் பரவி வருகிறது. முப்பது வயதைக் கடந்த பின்னும் பாவாடை, சட்டையில் பதினெட்டு வயது பெண் போல பொறாமைப்படும் அழகில் இருக்கிறார் நயன்தாரா.