உயரமான மலையில் ‘ரணம்’ படப்பிடிப்பு

     வி சினிமா க்ளோபல் நெட்வொர்க் , அகவொளி பிலிம்ஸ், எ வேல்யூ பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரணம்’. இயக்கம் – விஜய்சேகரன், இசை – மரியா மனோகர், வீரா, சரத்,சுவாசிகா,  எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. பாடல் காட்சி ஒன்றுக்காக , மூணார் அருகிலுள்ள கொழுக்கு மலை என்ற இடத்தில் டென்ட் அடித்து படக்குழுவினர் தங்கி உள்ளனர். இந்த கொழுக்கு மலைக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் உலகத்திலேயே மிகவும் உயரமான இடத்தில் தேயிலை விளையும் இடமாகும்.

இந்த இடத்திற்கு போக எந்த வாகன போக்குவரத்து வசதியும் கிடையாது என்பதால், படப்பிடிப்பு உபகரணங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை 15 குதிரைகள் வைத்து எடுத்துச் சென்றார்கள். தங்கும் விடுதிகள் எதுவும் இல்லாததால் படப்பிடிப்புக் குழுவினர் டென்ட் அடித்து அதில் தங்கி உள்ளனர். காட்டு விலங்குகளுக்கு பயந்து இரவு முழுவதும் தீ மூட்டி இருந்துள்ளனர்.

கலகல கத்திரிப் பூவாட்டம்..

நான் கண்ணடிச்சா..நின்னு போகும் தேரோட்டம்…

என்ற பாடல்காட்சியில் சுவாசிகா மற்றும் குழந்தைகள் பங்கேற்க கிரி நடன அமைப்பில் பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது.

Read Previous

7ம் அறிவு, வழக்கு எண் 18/9 – ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ளுமா ?

Read Next

‘ஆரோ 3டி’ தொழில்நுட்பத்தில் ‘விஸ்வரூபம்’