யு டிவி தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம் நடித்திருக்கும் தாண்டவம் படத்திற்கு எந்த நீக்கமும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இம்மாதம் 28ம் தேதி வெளிவரவிருக்கும் தாண்டவம் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 1000 திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள்.
தெய்வத்திருமகள் படத்திற்குப் பிறகு, யு டிவி, இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், விக்ரம், அனுஷ்கா, சந்தானம் தொடர்ந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் தாண்டவம் என்பது குறிப்பிடித்தக்கது.