ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் மாற்றான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
ஏறக்குறைய 50 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் 80 கோடி ரூபாய் கொடுத்து வினியோக உரிமையை பெற்றுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு என மொத்தமாக 1400 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளது. சூர்யா நடித்து இதுவரை வந்த படங்களை விட இந்த படத்திற்கு வியாபாரம் அதிக அளவில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அக்டோபர் 12ம் தேதியன்று வெளியாகிறது ‘மாற்றான்’.