‘சகுனி’ படத்திற்குப் பிறகு கார்த்தி தற்போது நடித்து வரும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன். சுராஜ் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படம் தெலுங்கில் ‘Bad Boy’ என்ற பெயரில் தயாராகிறது.
மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக தயாராகி வருகிறது அலெக்ஸ் பாண்டியன். இதுவரை வந்த கார்த்தி படங்களை விட இந்த படத்தில் ஆக்ஷன் அதிரடி அதிகமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இந்த படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்துவதற்காக ஒரு பாடல் மட்டும் இடம் பெறும் ஒரு ‘ஆல்பம் ’ உருவாக இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் அந்த பாடலை இசையமைக்க இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் கார்த்தி இந்த பாடலில் தோன்ற இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தையும் அந்த பாடலில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.
இந்த ஆல்பத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருப்பதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.